அஜைல் ஒப்பந்த அறிக்கை

அஜைலின் அணுகுமுறைகள்  நிச்சயமற்ற, தீர்க்கமில்லாத, பல சிக்கல்களை உள்ளடக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியதாக உள்ளன. ஒப்பந்தங்கள் முற்றிலும் முழுமை பெறாதவை என்ற கூற்றையும்,அவை பல்வேறு காலகட்டங்களில் பரிணாமம் பெறக் கூடியவை என்பதனையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். அஜைல் கோட்பாட்டுடன் இணைந்து செயலாற்றும் போது நாம் ஒப்பந்தங்களை மேம்படுத்த சிறந்த வழிமுறைகளை கண்டு கொள்கிறோம். மேம்படுத்துதல் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட அனைவரின் செயலாற்றலையும் அதிகரிக்க வழி வகுக்கிறோம்.

நமது செயல்பாடுகள் மூலமாக கீழ்க்கண்ட மதிப்பு கூட்டுதல் களை ஆக்கம் செய்கிறோம்:

01

வழங்குவதாய்  ஏற்றுக்கொண்டவை மட்டுமின்றி தீர்க்கமாக அறுதியிட்டு உரைக்க கூடிய முடிவுகள்.

02

 சிக்கல்கள் மற்றும் முழுமைதன்மையை தாண்டி எளிமை மற்றும் தீர்க்கமான முடிவுகள்.

03

ஆக்க பூர்வமான மாற்றங்களுக்கு இடமளிக்காத உறவுகளை காட்டிலும் அவற்றிற்கு வழி வகுக்கும் கூட்டு மேலாண்மை சிறந்தது.

04

இடர் சார்ந்த பொறுப்பு கூறலைவிட கூட்டு பொறுப்பேற்றல் மேலானது.

அஜைலின் ஒப்பந்த வரைவு உள்ளடக்கிய கொள்கைகள்:

கீழ்க்கண்ட கொள்கைகளை அனுசரித்தல் வெற்றிகரமான கூட்டு முயற்சிகளுக்கு அடித்தளம் வகுக்கும் என அஜைல் நம்புகிறது:

01

முதன்மை வாடிக்கையாளர் முதல் அனைத்து தர ஒப்பந்ததாரர் களுக்கும் நேர் மறை விளைவுகளை ஏற்படுத்துவதே நமது தலையாய நோக்கம் ஆகும்.

02

 சேவை வழங்குதலை  காட்டிலும் கூட்டு முயற்சி மேலானது. ஒப்பந்தமானது செயல்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே. அஜைலின் கூட்டு சேவையானது அனைத்தையும் உள்ளடக்கியது. பரஸ்பரம் ஒப்பந்தம் நேர் வதற்கு முன் பே தொடங்கி, சேவை வழங்கி முடித்த பின்னரும் தொடர்ந்து நடக்கின்றது.

03

ஒப்பந்தங்கள், ஒப்பந்ததாரருடனான உறவு மற்றும் ஆளுமை திறன் ஆகிய மூன்றும் ஓர் நேர் கோட்டில் பயணிக்க வேண்டும். செயலாக்கத்தின் விதிகளை ஒப்பந்தம் தெளிவாக உரைக்கின்றது. வெளிப்படை தன்மை, நேர்மை தன்மை, அதிகாரமளித்தல், சுயசார்பு நிலை, தெளிவான நோக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் சம சீரான விதிகளை உருவாக்கிடல் வேண்டும்.

04

ஒரு வெற்றிகரமான கூட்டணியில் கற்றல் மற்றும் பரிமாண வளர்ச்சி ஆயுள் வரை தொடர்கின்றன. சிறந்த ஆளுமைக்கு சவால் என்னவெனில் வெற்றியை உறுதி செய்யும் வேலைக்கு தேவையான கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகும்.

05

மதிப்பு கூட்டல் இல்லா செயல்களை செய்ய செலவிடும் கால அளவை குறைத்திடல்  வேண்டும். உற்பத்தி திறனுடைய அளவீடு செயல் முயற்சி யையும், மறைமுக செயல்பாட்டுக்கான கால அளவையும் பொறுத்து அமைந்திடல் வேண்டும்.

06

கூட்டு முயற்சிகளில் எந்த கட்டத்திலும் இடையூறுகள் உருவாகலாம். சமமான தொடர்பு நிலைகளை பொறுத்தும், பிரச்சினை களை இனம் கண்டு உடனுக்குடன் தீர்வுகளை பல்வேறு எல்லைகளை கடந்து சரியான தகவல் தொடர்புகளின் வாயிலாக  அளிப்பதின் மூலமே வெற்றி தரும் முடிவுகள்  கிடைக்கின்றன.

07

இடர்களை ஒதுக்கீடு செய்தலை காட்டிலும், அவற்றை திறம்பட கையாளக்கூடிய பொறிமுறைகளை பொதித்தல் சிறந்த பலனை தரும். வெளிப்படை தன்மை, பல்முனை சேர்க்கை மற்றும் துரித பின்னூட்டம் வாயிலாக இடர்களை செவ்வனே கையாளலாம்.

08

ஒப்பந்தத்தின் தேவைகள் மற்றும் நிறைவேற்று திறன்கள் தெளிவாய் இருப்பதை உறுதி செய்க; எவை அத்தியாவசிய தேவைகளோ  அவற்றை ஒப்பந்தத்திற்குள் கொண்டு வருதல் வேண்டும். மேலும் விற்பனை செய்யப்படும் பொருள் ( அ) சேவையின் முழு புரிதல் வேண்டும்.

09

நீண்டகால தீர்வுகளுக்கு தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மை மிக முக்கியமானவை. பொருள்/ சேவை, தொழில் நுட்பம், இடர் மேலாண்மை, சந்தை பற்றிய தனித்துவம் வாய்ந்த அறிவு தொகுதியை புதிய தீர்வுகளை உருவாக்கும் குழுவானது படைக்கும்.

10

ஓர் நல்ல ஒப்பந்தம் எனப்படுவது அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதே  ஆகும்.